all photo using freepic
all photo using freepic

தெரிஞ்சிக்கோங்க..முதுமைக்கேற்ற உணவுகள் எவை தெரியுமா?

Published on
முதியவர்கள் தங்களது தினசரி உணவு முறைகளில் பின்வருவனவற்றை கடைப்பிடிக்கலாம். புரதச்சத்து குறைவாக உள்ள உணவை உட்கொள்ளும் முதியவருக்கு சதை பலவீனம் அடைந்து, உடல் இளைத்ததுபோல் காணப்படும்.
முதுமையில் காளான் ஓரு நல்ல சத்துள்ள உணவு. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் இது சிறந்த உணவாகும்.
முதுமையில் உணவில் சோயாவை சற்று அதிகம் பயன்படுத்திக் கொள்வது நல்லது. சோயாவில் புரதச்சத்தும், சுண்ணாம்புச் சத்தும் அதிகமாக உள்ளது.
முதியவர்கள் தினமும் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கிவிட்டு வெள்ளைக் கருவை மட்டும் உண்ணலாம். இதில் கொழுப்புச்சத்து இல்லை. புரதம் அதிகம் உள்ளது.
நாற்பது வயதிற்கு மேல் எலும்பு தன் வலிமையை இழக்கிறது. ஆகையால் முதியவர்கள் சற்று கீழே விழுந்தாலும் எலும்பு முறிவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதைத் தவிர்க்க சுண்ணாம்புச் சத்துள்ள உணவுகளைச் சற்று அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
பால், கேழ்வரகு, முருங்கைக் கீரை, வெந்தயக்கீரை, அகத்திக்கீரை, கருவேப்பிலை, மீன், நண்டு, இறால், சுறா ஆகியவற்றில் சுண்ணாம்புச் சத்து நிறைய உள்ளது.
வயதான காலத்தில் மலச்சிக்கல் தவிர்க்க இயலாத ஓன்றாகும். அதைத் தவிர்க்க நார்ச்சத்து அதிகம் உள்ள உணவை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கேழ்வரகு, கோதுமை, கொள்ளு, கீரை, வாழைத்தண்டு, முட்டைக்கோஸ், காலிபிளவர், புடலங்காய், பாகற்காய், பேரீச்சம்பழம் ஆகியவற்றில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது.
கொள்ளு, ராகி, சோளம், கம்பு, தினை போன்றவை. முதுமைக்கேற்ற எல்லாவித சத்துக்களும் சிலதானியங்களில் இருக்கின்றன. குறைந்தது வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை சிறுதானிய உணவுகளைச் சேர்த்துக் கொள்ளவும்.
உப்பை அளவுக்கு அதிகமாக உண்ணும் சில முதியவர்களுக்கு உயர்ரத்த அழுத்தம் வர வாய்ப்பு உண்டு. ஆகையால், உடலில் எந்த நோய் இல்லாமல் இருந்தாலும் உப்பின் அளவை சிறிது குறைத்து உண்பது நல்லது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com