metaAI
metaAI

மாங்காய் சீசன் : சூப்பரான புளிப்பான மாங்காய் வற்றல் செய்வது எப்படி?

Published on
சீசனில் கிடைக்கும் மாங்காயில் பல்வேறு சுவையான ரெசிபிகளை செய்யலாம். இந்த வகையில் இன்று மாங்காய் வற்றல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
metaAI
தேவையான பொருட்கள் : நல்ல புளிப்பான, சதைப்பற்றுள்ள மாங்காய் - 20, மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன், பொடி உப்பு - 200 கிராம்.
metaAI
செய்முறை: மாங்காய்களைக் கழுவி துடைத்து நிழலில் காயவிடவும்.
metaAI
இதை துண்டுகளாக வெட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு நாள் குலுக்கிக் கொள்ளவும்.
metaAI
மூன்றாம் நாள் உப்பு நீரை வடித்து, மாங்காயை பெரிய தட்டுகளில் போட்டு வெயிலில் காயவிடவும்.
metaAI
பிறகு, மீண்டும் அதே உப்பு நீரில் போட்டு, நீரை வடித்து காயவிடவும்.
metaAI
இப்படி ஒரு வாரம் காயவிட்டு தண்ணீர் முழுவதும் வற்றி மாங்காய் சுக்கு போல் ஆனதும், ஒரு எவர்சில்வர் டப்பா அல்லது பானையில் போட்டு வைக்கவும். இது சீக்கிரம் கெட்டுப்போகாது.
metaAI

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com