சிப்ஸ் பாக்கெட்டில் பாதிக்கு மேல் காற்று..ஏன் தெரியுமா?

ஒரு பெரிய சிப்ஸ் பாக்கெட்டை ஆசையாக வாங்கிப் பிரித்தால்... உள்ள நாலு சிப்ஸும், நாற்பது மடங்கு காற்றும்தான் இருக்கும்! "காசு கொடுத்து காற்று வாங்கிய மாதிரி இருக்கும்னு நம்மில் பலர் புலம்பி இருப்போம்.
கம்பெனிக்காரர்கள் நம் அனைவரையும் ஏமாத்துகிறார்கள் என்று நினைப்போம். ஆனால் அப்படி இல்லை. அதுக்கு முக்கியமான 2 காரணங்கள் உள்ளன!
சிப்ஸ் பாக்கெட் பேக்டரில் இருந்து கடைக்கு வருவதற்குள், அந்த பாக்கெட் லாரி, வேன் போன்ற வாகனத்தில் குலுங்கி குலுங்கித் தான் வரும்.
சிப்ஸ் பாக்கெட்டில் உள்ள காற்று இல்லை என்றால், ஒண்ணோடு ஒண்ணு இடிச்சு, கடைசியா நீங்க பிரிக்கும்போது சிப்ஸ் இருக்காது, வெறும் "சிப்ஸ் தூள்" தான் இருக்கும்!
அந்த உடைசல் சேதாரத்தைத் தவிர்க்க, உள்ளே இருக்கும் காற்று ஒரு "ஏர் பேக்" (Air bag) மாதிரி பாதுகாக்கிறது.
சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்து வைத்துள்ள காற்று, நம் சுவாசிக்கும் சாதாரண காற்று (Oxygen) கிடையாது. அது நைட்ரஜன் (Nitrogen) வாயு.
சாதாரண காற்றை சிப்ஸ் பாக்கெட்டில் அடைத்தல், சிப்ஸில் இருக்கும் எண்ணெய் கெட்டு போய் (Rancid), கெட்ட வாடை அடிக்க ஆரம்பிக்கும். சீக்கிரம் நமத்து போகும்.
நைட்ரஜன் வாயு உணவுடன் ரியாக்ஷன் ஆகாது. அது சிப்ஸை பல மாதம் ஆனாலும் பிரெஷ்சாகவும் , மொறுமொறுப்பாவும் (Crispy) வைத்திருக்க உதவும்.
சிப்ஸ் பாக்கெட்டில் இருக்கும் இந்த வெற்றிடத்திற்குத் தொழில்நுட்ப ரீதியாக "Slack Fill" என்று பெயர். இது உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டே செய்யப்படுகிறது.
Explore