அதிகம் பயன்படும் சமையல் டிப்ஸ்..!

பால் பாயசம் செய்யும்போது பாதாம் பருப்பை அரைத்து அதில் சேர்த்தால் பாயசம் சுவையாக இருக்கும்.
சப்பாத்தி மாவு பிசையும் போது சிறிது அதில் கொஞ்சம் மக்காச்சோள மாவு சேர்த்து பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாக வரும்.
முட்டையை வேக வைக்கும் பொழுது சில துளிகள் கடலை எண்ணெய், கல் உப்பு சேர்த்தால் எளிதில் வேகும்.
ஊறுகாயில் சிறிதளவு வினிகர் சேர்த்தால் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும்.
இட்லி மாவுடன் சிறிதளவு கடலை மாவு சேர்த்து தோசை ஊற்றினால் தோசை மொறுமொறுவென்றும், பொன்னிறமாகவும் இருக்கும்.
வெங்காயம் நறுக்குவதற்கு முன் கத்தியை சூடு செய்துவிட்டு நறுக்கினால் கண்களில் எரிச்சல் இருக்காது.
புளி குழம்பு தயாரிக்கும்போது சிறிதளவு வெந்தயம் சேர்த்து தாளித்தால் சுவையாக இருக்கும்.
காரக்குழம்பில் காரம் அதிகமானால் சிறிது வெல்லம் சேர்த்தால் போதும். காரத்தின் வீரியம் குறைந்துவிடும்.
சோறு ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்க, அரிசி ஊற வைக்கும்போது சில ஐஸ் கட்டிகள் சேர்த்து ஊறவைத்தால் சாதம் உதிரியாக வரும்.
Explore