மூலநோயை தடுக்கும் நாவல்பழம் !!

நாவல் மரத்தின் அனைத்து பாகங்களுமே மருத்துவ பயன் கொண்டவை. நாவல்பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இதில் சிறப்பம்சமாக இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என முச்சுவையும் நிறைந்துள்ளது. நாவல்பழத்தின் துவர்ப்பு சுவை ஒரு சிறப்பு அம்சமாகும்.
நாவல் பழம் ரத்தத்தை சுத்தப்படுத்தும். ரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.
சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும் சக்தி நாவல்பழத்துக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலை போக்கும்.
மூலநோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மூலநோயின் தாக்கம் குறையும்.
நன்கு பழுத்த நாவல்பழத்தை உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.
தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல்பழத்தை மதிய உணவுக்கு பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.
மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.
நாவல்பழம் வியர்வையை பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும்.
சர்க்கரை நோயின் பாதிப்புக்குள்ளானவர்களும், சர்க்கரை நோய் வராமல் தடுக்க நினைப்பவர்களும் நாவல்பழம் சாப்பிடலாம்.
Explore