கம்பு... எப்படி சாப்பிட வேண்டும்... ஏன் சாப்பிட வேண்டும்?
அனைத்துச் சத்துக்களுமே சற்றுத் தூக்கலாக உள்ள கம்பு, வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் தொடங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் நான்கு அல்லது ஐந்து முறை கண்டிப்பாகத் தரவேண்டிய தானியம்.
கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம்.
கம்பு ரொட்டி சர்க்கரைநோய் உள்ளவர்களுக்கு ஏற்றது. கம்பில் லோ கிளைசெமிக் தன்மையை கொண்டுள்ளது.
இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, எடை குறைக்க விரும்புவோருக்கும் இது அற்புதத் தானியம்.
கம்பில் அதிக அளவிலான ஆன்டி - ஆக்சிடண்ட்டுகள் இருப்பதால் அதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தடுக்கலாம்.
கம்பு மாவில் கஞ்சி செய்து குழந்தைகளுக்கு ஊட்டி வருவதன் மூலம், உடலுக்கு வலுவும் கிடைக்கும். நல்ல நோயெதிர்ப்புத் திறனுடனும் இருப்பார்கள்.
கம்பில் உள்ள வைட்டமின் பி, மன அமைதியை உண்டாக்கி தூக்கத்தை உண்டாக்கும் ஹார்மோன்களின் சுரப்பைத் தூண்டும்.
கம்பில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இது உடலின் செரிமானத்தை எளிதாக்கி மலச்சிக்கலைப் போக்குகிறது.