கசகசா விதை :பார்க்க சிறிது..ஆனால் பலன் அதிகம்..!

வெண்மை நிறத்தில், உற்றுப்பார்த்தால் சிறுநீரக வடிவத்தில், கடுகை விட சிறிய அளவில் இருக்கும் கசகசா விதைகள் கடலளவுக்கு அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னுள் அடக்கியுள்ளது.
வைட்டமின்களான - பி 1, பி-2, பி-6, நியாசின், போலிக் அமிலம், பான்டோதெனிக் அமிலம், வைட்டமின்- ஈ மற்றும் வைட்டமின்-சி போன்ற சத்துக்களும், இரும்புச் சத்து,செம்புச் சத்து, பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகச் சத்து, பாஸ்பரஸ், செலினியம் ஆகிய முக்கிய தாது உப்புக்களும் உள்ளன
கசகசா விதைகளுடன் தேங்காய் துருவல் மற்றும் நாட்டுசர்க்கரை சேர்த்து அதனுடன் சிறிது பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாயில் அடிக்கடி உண்டாகும் அச்சரம் எனும் வாய்ப்புண்ணிற்கு நன்மை பயக்கும்.
அடிக்கடி கசகசா சாப்பிடுவதால் உடல் வன்மை அடையும். ஆண்மை பெருகும். தூக்கமின்மையை போக்கி நல்ல உறக்கத்தைத் தரும்.
புற்றுநோய் சார்ந்த அதிதீவிர வலியுடன் கூடிய நோய்நிலையில் கசகசா செடியின் மூலக்கூறுகள் மகத்தான பலன் தருவது குறிப்பிடத்தக்கது.
கசகசா விதைகளை பாலுடன் சேர்த்து அரைத்து பூசிவர தலையில் உள்ள பொடுகு போக்க உதவும்.
கசகசாவை பாலில் ஊறவைத்து அரைத்து பசையாக்கி முகப்பருக்களுக்கும், தோல் வறட்சிக்கு பூசி வர சிறந்த நன்மை பயக்கும்.
குறிப்பு :பல்வேறு மருத்துவ குணங்கள் இருந்தாலும் கசகசா விதைகள் சிறுவர்களுக்கும், கர்ப்பிணி பெண்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும், சிறுநீரக நோயாளிகளுக்கும் ஏற்புடையது அல்ல.
Explore