அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள  பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை...!

அயோத்தி ராமர் கோவில் கருவறையில் உள்ள பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை...!

Published on
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில் பிரதமர் மோடி, உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல், உ.பி. முதல்- மந்திரி யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் சிறப்பு பூஜை நடத்தினர்.
பிரதிஷ்டைக்குப் பின்னர் பிரதமர் மோடி, பால ராமர் சிலைக்கு முதல் தீபாரதனை காட்டி வழிபாடு நடத்தினார்.
பாலராமர் கண்களில் கட்டப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பிறகு அகற்றப்பட்டது. ராமர் சிலையை பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.
அயோத்தி ராமர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட பால ராமர் சிலை மலர்கள், தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com