தேன்-இஞ்சி: நம் வீட்டு சமையலறையில் இருக்கும் மருத்துவ குணம் வாய்ந்த பொருட்கள்தான் தேனும் இஞ்சியும். இஞ்சி, சளியை இறுக்கமடையச் செய்கிறது, தொண்டை எரிச்சலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. தேன், தொண்டை வலியைப் போக்குகிறது.
credit: freepik
எனவே இஞ்சியை அரைத்துச் சாறு எடுத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து குடிக்கும் போது, இருமல் மற்றும் தொண்டை வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இப்படி தினமும் இரண்டு வேளை உட்கொள்ள வேண்டும்.
credit: freepik
மூலிகை தேநீர்: நல்ல குளிர்ச்சியான காலத்தில், அதுவும் மழை நேரத்தில் சூடான மூலிகை தேநீரை பருகி வந்தால், அது உடலுக்கு இதமாக இருப்பதோடு, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.
credit: freepik
துளசி, பட்டை, மஞ்சள் ஆகியவற்றை கொதிக்கும் நீரில் போட்டு ஒரு கொதிவிட்டு இறக்கி, வடிகட்டி குடிக்கும்போது, நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடைந்து, சளி, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
credit: freepik
இருமலுக்கான கசாயம்: இந்த கசாயம் செய்வதற்கு சிறு உரலில் 2 துண்டு இஞ்சி, 1 கையளவு துளசி, 5 மிளகு, 5 கிராம்பு, 2 துண்டு பட்டை, 5 புதினா இலை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு இடிக்க வேண்டும்.
credit: freepik
ஒரு பாத்திரத்தில் 1 கப் நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் இடித்து வைத்துள்ளதைச் சேர்த்து, 3-5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின்பு அதை இறக்கி வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்துக் கலந்து குடிக்க வேண்டும். இதை குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
credit: freepik
ஆவி பிடிப்பது: நல்ல சூடான நீரில் யூகலிப்டஸ் எண்ணெயை சில துளிகள் சேர்த்து, அந்நீரை 10 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 முறை செய்து வந்தால், மூக்கடைப்பில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.
credit: freepik
மஞ்சள்- பால்: மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து தினமும் இரவு தூங்கும் முன் குடித்துவந்தால், சளி, தொண்டைக் கரகரப்பு, இருமல் போன்றவற்றில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.