ஸ்டாரை எண்ண முடியாது..ஸ்டார் பழத்தின் நன்மைகளை பெற முடியும்.!

ஸ்டார் பழத்தில் வைட்டமின் பி, சி, பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்து, ஆண்டிஆக்சிடண்டுகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
ஸ்டார் பழத்தில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகிறது. இது நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்துகிறது.
ஸ்டார் பழத்தில் உள்ள கரையும் தன்மை கொண்ட நார்ச்சத்தானது நம் உடலின் கொழுப்புகளை கரைத்து, ஆரோக்கியமான எடை இழப்புக்கு வழிவகுக்கும்.
உடலுக்கு தேவையான தாது உப்புக்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் ஸ்டார் பழத்தில் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஸ்டார் பழத்தில் உள்ள வைட்டமின் பி மற்றும் சி கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.
ஸ்டார் பழத்தில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
ஸ்டார் பழத்தில் அதிக நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் நீர்ச்சத்து குறைப்பாட்டை குறைக்கக்கூடும்.
இதில் உள்ள வைட்டமின் சி, பி கரோடினீன், ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகியவை நல்ல செல்களின் அழிவை தடுத்து, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
Explore