சண்டே ஸ்பெஷல்...சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி செய்யலாம் வாங்க!

Photo: MetaAI
தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி - 2 கப், மீல் மேக்கர் - 1 கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி -2, இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2-3, புதினா இலை - ஒரு கைப்பிடி, கொத்தமல்லித் தழை- ஒரு கைப்பிடி, பிரியாணி மசாலா - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன், மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன், தயிர் - ½ கப், எலுமிச்சை -½ பழம், எண்ணெய் - 3 டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு- தேவைக்கேற்ப
Photo: MetaAI
தாளிப்பதற்கு: பட்டை -1, கிராம்பு -3, ஏலக்காய் -2, அன்னாசிப்பூ -1, பிரியாணி இலை -1
Photo: MetaAI
செய்முறை: முதலில், மீல் மேக்கரை வெதுவெதுப்பான நீரில் 15-20 நிமிடங்கள் ஊறவைத்து, அதன் பிறகு தண்ணீரை நன்கு பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.பாசுமதி அரிசியை கழுவி, 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்.
Photo: MetaAI
ஒரு குக்கரில் எண்ணெய், நெய் சேர்த்து சூடாக்கவும். அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும். நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
Photo: MetaAI
இஞ்சி பூண்டு விழுது மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும். நறுக்கிய தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்கவும். பிரியாணி மசாலா, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
Photo: MetaAI
மீல் மேக்கரை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். தயிர், புதினா, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு கலக்கவும். ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். அரிசிக்குத் தேவையான அளவு தண்ணீர் மற்றும் அரைப்பழம் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும்.
Photo: MetaAI
குக்கரை மூடி, ஒரு விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவைக்கவும். பிரஷர் அடங்கியதும் குக்கரை திறந்து, மெதுவாக பிரியாணியை கிளறவும்.
Photo: MetaAI
குறிப்பு: மீல் மேக்கரை வேகவைக்கும் போது சிறிது உப்பு சேர்த்துக் கொண்டால் சுவை கூடும். பிரியாணியுடன் வெங்காயப் பச்சடி அல்லது கத்திரிக்காய் தொக்கு சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
Photo: MetaAI
Explore