ஆரோக்கியமான முறையில் குழந்தைகளின் எடை அதிகரிக்க சிறந்த உணவுகள்!
credit: freepik
வாழைப்பழம்: வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, பி மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளது.. இது ஒரு அதிக கலோரிகளைக் கொண்ட உணவும் ஆகும்.குழந்தைகளின் உடல் எடையை வாழைப்பழம் இலகுவாக அதிகரிக்கும்.
credit: freepik
தானியங்களும் பருப்புவகைகளும்: அவல், கொண்டைக்கடலை, பயறு போன்ற தானிய வகைகள் மற்றும் பிஸ்தா, பாதாம் போன்ற பருப்பு வகைகளில் புரதம், மெக்னீசியம், கல்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் அதிக நார்ச்சத்தும் நிறைந்திருக்கிறது.
credit: freepik
அவகாடோ: குழந்தைகளின் உணவில் அவகாடோவை சேர்ப்பது உடல் எடையை அதிகரிக்க உதவுவது மட்டுமல்லாமல், பல ஆரோக்கிய நன்மைகளையும் கொடுக்கும்.இது வைட்டமின்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவாகும்.
credit: freepik
நெய்: இந்த சுத்திகரிக்கப்பட்ட நெய் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் ஏற்ற நல்லதொரு சத்தான உணவு. பிற உணவுப்பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய இது உண்மையில் குழந்தைகளின் உணவிற்கு சேர்க்ககூடிய மிகவும் பயனுள்ள உணவாகும்.
credit: freepik
சீஸ்: சீஸ் (பாலாடைக்கட்டி) மிகவும் சத்தான உணவு என்பதை நாம் அனைவரும் அறிவோம். இதில் கல்சியம், புரதம் மற்றும் கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமான உணவாகும். உப்பு சேர்க்காத சீஸ்களை குழந்தைக்குக் கொடுப்பது எடையை அதிகரிக்க உதவும்.
credit: freepik
யோகர்ட்: யோகர்ட்டில் கொழுப்பு, புரதம், நார்ச்சத்து மற்றும் கல்சியம் போன்ற பல சத்துக்கள் உள்ளன. ஊட்டச்சத்து தேவைக்கும் எடை அதிகரிப்புக்கும் சரியான வயதில் குழந்தைக்கு தயிரை வழங்கத் தொடங்குவது சிறந்தது. அதோடு வயிற்றுக் கோளாறுகளையும் சரி செய்யும்.
credit: freepik
முட்டை: குழந்தைகளின் ஆரோக்கியமான எடை அதிகரிப்புக்கு முட்டை ஒரு சிறந்த உணவு, ஏனெனில் இதில் புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது.