நீர்மூழ்கி கப்பலின் சரித்திரம்..!

நீர்மூழ்கிக் கப்பலின் சரித்திரம் 1578-ம் ஆண்டு ஆரம்பிக்கிறது.
இங்கிலாந்தை சேர்ந்த கணித மேதை வில்லியம் போர்னி என்பவர்தான் நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பு பற்றி ஒரு புத்தகம் எழுதினார்.
27 வருடங்கள் கழித்து கார்னீலியஸ் வான்டிரியல் என்பவர் அந்தக் கப்பலை வடிவமைத்தார்.
அப்படி உருவான கப்பலை தேம்ஸ் நதியில் சுமார் 4 மீட்டர் ஆழத்தில் இயக்கி வெற்றிகரமாக சோதனை செய்தார்.
முதலில் ஒரு நபர் பயணம் செய்யக் கூடிய நீர் மூழ்கிக் கப்பலை டேவிட் புஷ்நல் உருவாக்கினார். இதற்கு 'கடல் ஆமை' என பெயர் சூட்டப்பட்டது.
1775-ல் அமெரிக்க ராணுவம் முதன்முதலில் நீர்மூழ்கிக் கப்பலை கடற்படைப் போரில் தாக்குதல் ஆயுதமாகப் பயன்படுத்தியது.
உலகளவில் அதிக நீர்மூழ்கிக் கப்பலை(65) ரஷ்யா வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவைச் சார்ந்த டைபூன் வகை நீர்மூழ்கிக் கப்பல் உலகிலேயே பெரிய இராணுவ நீர்மூழ்கிக் கப்பலாகும்.