உணவில் புளிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் புளி வகைகளுள் பழமையான ஒன்று குடம் புளி. மலையாளத்தில் மலபார் புளி என்றும், கன்னடத்தில் உப்பேஜ் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த புளியில் ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் (எச்.சி.ஏ.) என்னும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவை கொழுப்பை எரிக்கும் திறன் கொண்டவை.
குடம் புளியை உணவில் சேர்ப்பது வயிறு வீக்கத்தையும், இன்சுலின் அளவையும் குறைக்க உதவும்.
குடம் புளி ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவக்கூடும்.