நாய் கடித்த பின் செய்ய வேண்டியது என்ன ? சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை..!!

all photo using metaAI
நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விட வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில், நாய் கடித்த பின் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
நாய் கடித்த உடன் அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை சென்று அணுக வேண்டும்.
நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு மற்றும் சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.
வீட்டு கிருமி நாசினியை பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை கழுவ வேண்டும்.
செல்லப் பிராணிகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்த வேண்டும்
நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து தடுப்பூசிகளையும் செலுத்த வேண்டும்
Explore