சுட்டெரிக்கும் வெயில்.. இதமாக ஒரு கம்பங்கூழ்.!!

கோடையில் அதிகம் காணப்படும் உடல் சூடு, நீரிழிவு, செரிமான கோளாறுகள் போன்றவற்றுக்கு தீர்வாக, இயற்கையான கம்பங்கூழை குடிப்பது சிறந்தது.
இளம் வயதினரிலிருந்து முதியவர்களுக்கு வரக்கூடிய சோர்வு, உடல் உஷ்ணம் ஆகியவற்றை கம்பங்கூழ் தணிக்கக் கூடியது.
கம்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதம், வைட்டமின் ஈ, பி உள்ளிட்ட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.
கம்பங்கூழ் ரத்தத்தை சுத்தப்படுத்தி, உடலை நாள் முழுவதும் தெளிவாகச் செயல்பட செய்யும்.
வெயில்காலத்தில் அதிகம் சந்திக்கும் முடி உதிர்தல் பிரச்சினைக்கு கம்பங்கூழ் சிறந்த தீர்வாகும்.
இதில் இருக்கும் நார்ச்சத்து மலச்சிக்கலை பிரச்சினையை போக்கி, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
கம்பங்கூழ் ஆரோக்கியமான உடல் எடைக்கு வழிவகுக்கும்.
இன்றைய சூழலில், ரசாயன கலந்த பானங்களை விட, நம் பாரம்பரிய உணவுகளையும், இயற்கை பானங்களையும் தேர்வு செய்வது நல்லது.