சாம்பார், கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயத்தில் சிறிதளவு வெந்தயப் பொடி தூவினால் வாசனையாக இருக்கும்.
அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க உளுந்தம் பருப்பு வைத்திருக்கும் டப்பாவில் அப்பளங்களை மேலாக வைத்து இறுகி மூடிவிட்டால் போதும். வெயிலில் உலர்த்தியது போலாகி விடும்
காலையில் கீரை சமைக்க இரவே வாங்கி விட்டால், அது வாடிப் போகாமல் இருக்க கீரையின் வேர் பாகத்தை நீரில் மூழ்கும்படி வைக்கலாம்.
ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது உறவைத்த பச்சரிசியுடன் ஒரு மூடி தேங்காய் துருவல், ஒரு கரண்டி பழைய சாதம் போட்டு அரைத்தால் ஆப்பம் மிருதுவாக இருக்கும்.
காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சு தோல்களை சமையல் பொருட்கள் இருக்கும் அலமாரியில் வைத்தால் பூச்சிகள் வராது.
வாழைப்பழம் சீக்கிரம் கருத்து விடாமல் இருக்க ஈரத் துணியால் சுற்றி வைத்தால் பிரெஷ்ஷாக இருக்கும்.
முட்டைக்கோஸை நறுக்கும் போது அதன் தண்டுகளை சாம்பாரில் போட்டு சமைத்தால் நன்றாக இருக்கும்.
தயிர் கெட்டியாக இருக்க, நன்கு காய்ச்சி ஆறிய பாலுடன் சிறிது காய்ச்சாத பாலையும், சிறிது தயிரையும் சேர்த்து வைக்கலாம்.