இன்றைய ராசிபலன் - 01.03.2025!

இன்றைய ராசிபலன் - 01.03.2025!

Published on
மேசம்: சுப காரிய பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். இணைய தளம் மூலம் வேலையை முடிப்பீர்கள். கடன் தொல்லை நீங்கி தங்கள் வட்டாரத்தில் தங்களுக்கு மதிப்பு உயரும். தம்பதிகளிடையே மனக்கசப்பு தீரும். உத்தியோகத்தில் சலுகை கிடைக்கும். உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள்.
ரிசபம்: கலைஞர்களுக்கு முன் பணம் கிடைக்கும். தந்தைவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பெண்பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு டென்டர்களில் தங்களுக்கு சாதகமாக முடியும். உத்யோகஸ்தர்களுக்கு முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும்.
மிதுனம்: மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். திருமணப் பேச்சு வார்த்தையை துவங்குவீர்கள். பிள்ளைகள் பெற்றோரை மதிப்பர். வழக்கு சாதகமாக முடியும். அரசு உத்யோகஸ்தர்களுக்கு கூடுதல் வருவாய் உண்டு. அறுவை சிகிட்சையின்றி மருந்து மாத்திரைகளிலேயே உடல் நலம் தேறும்.
கடகம்: இன்று முக்கியமான காரியங்களை முடிக்கும் நாளாக அமையும். புரிந்து கொள்ளாமல் பிரிந்த நண்பர்கள் இனி கை கோர்ப்பர். சகோதர வழி உறவு மேம்படும். கணவன்-மனைவிக்குள் அனுசரித்துபோவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். தேகம் மினுமினுக்கும். வியாபாரம் செழிப்பாக இருக்கும்.
சிம்மம்: இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் பயணங்கள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. காரணம் அந்த பயணங்களால் சிறு சிறு விபத்துகள் அல்லது காரியத் தடை ஏற்படலாம். ஆதலால், இதனால் நேரமும் பணவிரையமும் ஏற்படும். ஆதலால், இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது.
கன்னி: குடும்ப வருமானத்தை மிகுதிப்படுத்த பகுதி நேர வேலையையும் துவங்குவீர்கள். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் குறையும். ஒரு முறைக்கு இரு முறைப் படிப்பது நல்லது. வெளியில் செல்வதை தவிர்ப்பீர்கள். தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். புதிய வியாபார திட்டங்கள் தீட்டுவீர்கள்.
துலாம்: பண விஷயத்தில் சிக்கனம் தேவை. எதிர்பாராத திடீர் சந்திப்பு நிகழும். அது தங்களுக்கு ஆனந்தத்தைத் தரும். பணம் பலவழிகளில் கிட்டும். காதலர்கள் பொறுப்புணர்வர். பிள்ளைகளைப் பற்றிய மனவருத்தம் நீங்கும்.ஆடம்பர செலவினை குறைப்பது நல்லது. நீண்ட நாள் ஆசை நிறைவேறும்.
விருச்சிகம்: நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த தங்கள்னின் மகளின் திருமணத்தைப் பற்றி முடிவெடுப்பர். தம்பதிகளிடையே சமரசம் ஏற்படும். வியாபாரத்தில் தாங்கள் நினைத்ததற்கும் மேலாக லாபம் ஏற்படும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர்.
தனுசு: வர வேண்டிய பணம் கைக்கு வரும். காதலர்கள் சிந்திப்பது நல்லது. மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் கொள்வர். விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தம்பதிகளிடையே வாக்குவாதம் ஏற்படும். பின்பு சமரசமாவர். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
மகரம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பிரபலங்கள் நண்பராவர். அவர்களால் பெரிய உதவிகள் கிடைக்கும். பெரியர்களின் ஆசி கிட்டும். வேலைகள் தள்ளிப் போகும். உடலில் அசதி தோன்றும். வீட்டு உணவை உட்கொள்வது நல்லது.
கும்பம்: உத்தியோகத்தில் அமைதி உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டார் உதவுவர். பண வரவு தாமதப்படும். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். விரும்பிய நபரை கைபிடிப்பீர்கள். இன்று குடும்பத்துடன் பொழுது போக்கு இடங்களுக்குச் சென்று வருவீர்கள். உடல் நலத்தில் கவனம் தேவை.
மீனம்: பிள்ளை தங்களுக்கு பிடித்த கல்வி நிறுவனங்களில் இடம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கறாராக இருங்கள். தம்பதியரிடையே வாக்குவாதம் வந்து போகும். ஒருவர் அமைதியாக இருப்பது நல்லது. செலவுகள் அதிகரிக்கும். சில்லரை வியாபாரிகள் மற்றும் காய்கறி வியாபாரிகள் பயனடைவர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com