மேஷம் : நீங்கள் முயற்சி செய்யும் காரியங்களில் சில தடை, தாமதம் உண்டாகி பின் காரியம் கைகூடும். வெளியூர் நபர்களால் ஆதாயம் கிட்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். அதைக் காப்பாற்றத் திணறுவீர்கள். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். முதுகுவலி வந்து போகும்.
ரிஷபம் : ரோகினி நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் சந்திராஷ்டமம் இருப்பதால் என்பதால் முக்கியமான நபர்களை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்கள் ராசிக்கு சந்திரன் அஷ்டமஸ்தானத்தில் உள்ளதுதான். சுபகாரியங்களை தள்ளி வைப்பது நல்லது. இன்று இறைவனை வேண்டுவது நல்லது.
மிதுனம் : பணவரவுக்கு பஞ்சமில்லை. பிள்ளைகளால் நற்பெயரும் கௌரவமும் அதிகமாகும். எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஏனெனில் உங்களுக்கு அவர்கள் மறைமுகமாகப் பிரச்சினைகள் உண்டாக்குவார்கள். இளைய சகோதரர்களால் நன்மை உண்டாகும்.
கடகம் : பிள்ளைகள் நன்கு படிப்பர். கூட்டு வியாபாரிகளிடையே இருந்த மனக்கசப்பு நீங்கும். சில சமயம் தங்கள் பேச்சில் முதிர்ச்சி தெரியும். வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
சிம்மம் : உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். உணவு விசயத்தில் கவனம் தேவை. அதிக விற்பனைக்காக மார்கெட்டிங் பிரிவினர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் வரவு செலவுகளை சரிபார்ப்பது நல்லது. காதலர்களிடம் ஊடல்கள் வந்து போகும்.
கன்னி : பொதுநலத்தில் ஈடுப்பட்டவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய பிரபலங்கள் அறிமுகமாவர். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை.
துலாம் : நண்பர்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பீர்கள். சகோதரி வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். பங்குச் சந்தையில் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கிட்டும். மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சி அவசியம் வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும்.
விருச்சிகம் : தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள் பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆரோக்கியத்தில் பிரச்சினை இல்லை. குடும்பத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் மிகும். பிரபலங்கள் உதவுவர். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
தனுசு : வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். பணப் பிரச்சினை இருக்காது. சில்லரை வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மகரம் : மற்றவர்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளால் ஆறுதலடைவீர்கள். வியாபாரிகளுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பர். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிரிகள் விலகிப் போவர்.
கும்பம் : உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு சிற்சில அசௌகரியங்கள் உண்டாகும். இருப்பினும் அவற்றை சமாளித்து சுமூகமுடன் இருப்பீர்கள்.மாணவர்கள் அரசுத் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெற முற்பவர். கடன் கேட்ட இடத்தில் கால தாமதம் ஏற்பட்டு பிறகு கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
மீனம் : தம்பதிகளிடையே மனஸ்தாபம் நேரலாம், குடும்ப விசயத்தை வெளியிடாமல் இருப்பது நல்லது. முன்கோபத்தினை தவிர்ப்பது நல்லது. தியானம் மேற்கொள்வது டென்ஷனை குறைத்து, உடல் பொலிவினைக் கூட்டும். ஒரு சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.