அதிக சுவையும் அதற்கேற்ப விலையும்...டாப் 7 மாம்பழம்.!
பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழம் உலகளவில் விதவிதமான ரகங்களில் விளைவிக்கப்படுகிறது. அதற்கேற்ப அதன் சுவையும், அளவும், தரமும் மாறுபடுகிறது.
அதுவே அதன் விலையையும் நிர்ணயிக்கிறது. உலக அளவில் அதிக விலை கொண்ட மாம்பழங்களில் டாப் 7 ரகங்கள் இதோ காணலாம்.
மியாசாகி : இந்த மாம்பழத்தின் பூர்வீகம் ஜப்பான். அங்குள்ள கியூஷு மாகாணத்தில் மியாசாகி நகரில் விளைவிக்கப்படுவதால் அதன் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
சிந்திரி : பாகிஸ்தான் நாட்டில் சிந்து மாகாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் இந்த மாம்பழம் பயிரிடப்படுகிறது. அதனால் சிந்திரி மாம்பழம் என்று அழைக்கப்படுகிறது.
மணிலா : இதன் பூர்வீகம் பிலிப்பைன்ஸ். இது கராபோ மாம்பழம் என்றும் அழைக்கப்படுகிறது. 14 வகை மணிலா மாம்பழங்கள் உள்ளன.
அல்போன்சா : இந்தியாவை பூர்வீகமாக கொண்ட பிரபலமான மாம்பழ வகைகளுள் இதுவும் ஒன்று. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலத்தில் வல்சாத் மற்றும் நவ்சாரி பகுதிகளில் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
கோஹிதூர் : மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியில் பிரத்யேகமாக விளைவிக்கப்படும் மாம்பழமாகும்.
ஹகுகின் நோ தையோ : மாமரங்கள் பொதுவாக வெப்பமண்டல சூழலில் வளரும் தன்மை கொண்டது. ஆனால் இந்த மா மரம் அதற்கு விதி விலக்கு. குளிர் சூழல்தான் இந்த மா மர வளர்ச்சிக்கு இதமாக இருக்கும்.
நூர்ஜஹான் : மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கத்திவாடா என்ற இடத்தில் மட்டுமே இது விளைவிக்கப்படுகிறது. முகலாயப் பேரரசர் ஜஹாங்கீரின் மனைவி நூர்ஜஹான் பெயரில் அழைக்கப்படுகிறது.