நெல்லையில் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா தலங்கள்!

Photo: wikipedia
குறிஞ்சி, முல்லை,மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களையும் ஒருங்கே கொண்டு சிறப்பு பெற்ற நெல்லை மாவட்டத்திம் மனதை மயக்கும் முக்கிய சுற்றுலா தளங்கள்.
Photo: wikipedia
பாபநாசம் அணை: இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பொதிகை மலையின் பூங்குளத்தில் காரையாறு (தாமிரபரணி) உற்பத்தியாகிறது. கோடை வெயிலில் குடும்பத்துடன் சென்று குளிக்க ஏற்ற இடம் பாபநாசம்
Photo: wikipedia
களக்காடு தலையணை: மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் தண்ணீரில் மிகவும் குளிர்ச்சியானது பச்சையாறு ஆகும். களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பச்சையாறின் குறுக்கே தலையணை அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்கிறார்கள்.
Photo: wikipedia
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்: இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி மற்றும் பல்வேறு வகையான குரங்குகள், மான்களும், அரிய வகை மரங்களும், மூலிகை செடிகளும் நிறைந்து காணப்படுகின்றன. மேலும் மான்கள் நிறைந்த மாஞ்சோலை, ஆண்டு முழுவதும் மழை பெறும் ஊத்து பகுதியும் அமைந்துள்ளன.
Photo: wikipedia
அகஸ்தியர் அருவி: வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாய்ந்தோடும் வழியில் இருப்பதால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில் ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்ப ரித்து கொட்டுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து குளித்து செல்கின்றனர்.
Photo: wikipedia
மணிமுத்தாறு அருவி: மேற்கு தொடர்ச்சி மலையின் மிக உயரமான இடங்களான காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து, மாஞ்சோலை போன்ற பகுதிகளில் இருந்து தண்ணீர் வருகிறது. அழகிய மலைப்பாதை வழியாக பயணித்து அருவியில் ஆனந்த குளியல் போடலாம்.
Photo: wikipedia
திருக்குறுங்குடி நம்பியாறு: வனத்துறை சோதனை சாவடியில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றால் இயற்கை எழில் கொஞ்சும் மலையில் வாசம் செய்யும் நம்பி கோவில் அமைந்துள்ளது. வனவிலங்குகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் குறிப்பிட்ட தூரம் மட்டுமே குளிக்க அனுமதி
Photo: wikipedia
Explore