நோய் நொடியின்றி, நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும் கிராமிய பழக்கங்கள்!
credit: freepik
புல்லில் வெறுங்காலுடன் நடத்தல்: இந்த நடைப்பழக்கம் மன அழுத்தத்தை குறைக்கும். உடலுக்குள் ரத்த ஓட்ட சுழற்சியை மேம்படுத்தும்.
credit: freepik
வெதுவெதுப்பான நீர் குடித்தல்: காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீர் அல்லது செம்பு பாத்திரத்தில் சேமிக்கப்பட்ட தண்ணீரை பருகுவது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற வழி வகை செய்யும். செரிமானத்தை துரிதப்படுத்தும்.
credit: freepik
சுவாச பயிற்சிசெய்தல்: விடியற்காலையில் எளிய சுவாசப்பயிற்சிகளை செய்வது நுரையீரல், ஆக்சிஜன் செயல் திறனையும், கவனிக்கும் திறனையும் மேம்படுத்தும். புதிய, மாசுபடாத, புத்துணர்ச்சியூட்டும் காற்றை சுவாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
credit: freepik
பிரார்த்தனை செய்தல்: பிரார்த்தனையுடன் அன்றைய நாளைத் தொடங்குவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், அமைதியான மனநிலையை தக்கவைக்கவும், உணர்ச்சி ரீதியாக சிறப்பாக செயல்படவும், நீண்ட ஆயுளுடன் வாழவும் உதவிடும்.
credit: freepik
குறைவாக உணவு சாப்பிடுதல்: காலை உணவை குறைவாக சாப்பிடும் வழக்கத்தையும் பின்பற்ற வேண்டும். அந்த உணவு ஊட்டச்சத்துமிக்கதாகவும் இருக்க வேண்டும். உடலில் அதிக சுமை இல்லாமல் நீடித்த ஆற்றலை அளிக்க வித்திடும்.
credit: freepik
சூரிய ஒளியில் உலாவுதல்: சூரிய உதயத்தின்போது திறந்த வெளியில் நேரத்தை செலவிடுவது உடலுக்கு தேவையான இயற்கையான வைட்டமின் டி கிடைக்கச் செய்துவிடும். தூக்க சுழற்சிகளை ஒழுங்குபடுத்தும்.
credit: freepik
சூரிய நமஸ்காரம் மேற்கொள்ளுதல்: தினமும் காலையில் சில நிமிடங்கள் சூரிய நமஸ்காரம் செய்வது உடலின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தும். உடல் வலிமையை அதிகரிக்கச்செய்யும். மனதை ஒருநிலைப்படுத்தும்.