ஒரு பெண் எந்த வயதுவரை கருத்தரிக்கலாம்?

கர்ப்பகாலம் சுலபமாக இருக்கவேண்டும் என்றால் 20 முதல் 30 வயதிற்குள் கருத்தரிக்கவேண்டும்.
30 வயதை தாண்டியபிறகு கருமுட்டையின் தரம் மற்றும் ஜெனிட்டிக் பிரச்சினைகள் அதிகரித்துக்கொண்டே போகும்.
40 வயதிற்கு மேல் இயற்கை கருத்தரித்தல் என்பது சற்று கடினம்தான்.
45வயதிற்கு பிறகு மெனோபாஸ் நிலையை அடைந்துவிடுவார்கள் என்பதால் கருத்தரித்தல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை.
கிச்சைகள்மூலம்கூட 50 வயதிற்கும் மேல் கருத்தரிப்பது நல்லதல்ல.
அதற்கும்மேல் குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த குழந்தைக்கு சமூகரீதியாக பல்வேறு பிரச்சினைகள் உருவாகும்.
எனவே மருத்துவர்களும் அதுபோன்று குழந்தைபெற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதில்லை.