பயனுள்ள சமையல் டிப்ஸ்..!

ஜவ்வரிசியை வேகவைத்து அந்த தண்ணீரில் உப்பு, அரிசி மாவு, பச்சை மிளகாய் விழுது கலந்து கிளறினால் வடாகம் சுலபமாக பிழியலாம்.
வெந்தயக் குழம்பு தயார் செய்யும்போது ஒரு டீ ஸ்பூன் எள்ளுப் பொடியை தூவினால் வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
பாயசம் நீர்த்து போயிருந்தால் அதில் வாழைப் பழத்தைப் பிசைந்துப் போட்டு கொஞ்சம் தேனும் கலந்தால் போதும். சுவையான கெட்டிப் பாயசம் ரெடி.
பூரிக்கு மாவு பிசையும்போது ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு சேர்த்துப் பிசைந்தால் நல்ல நிறத்துடன் பூரி சுருங்காமல் வரும்.
தேங்காய் சாதம் செய்யும் போது அதில் சிறிது வெள்ளை எள்ளை வறுத்துப்பொடி கலந்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
சூடான எண்ணெய்யில் சிறிதளவு மைதா மாவு சேர்த்த பிறகு எதை பொரித்தாலும் வாணலியில் ஒட்டாது.
சமையல் அறையில் உள்ள மேடையில் எண்ணெய் கொட்டி இருந்தால் கடலை மாவைக் கெட்டியாகத் தண்ணீரில் கரைத்துப் பூசி சிறிது நேரம் ஊறவைத்து தேய்த்துக் கழுவ, பளிச்சென்று இருக்கும்.
அரிவாள் மனை, தேங்காய் துருவி, காய்கறி நறுக்கப் பயன்படும் கத்தி போன்றவற்றில் உள்ள துருவைப் போக்க அவற்றின் மீது ஒரு வெங்காயத்தை நறுக்கித் தேய்த்தால் துரு இருந்த இடம் தெரியாமல் நீங்கிவிடும்.
பிரிட்ஜில் காய்கறி டிரேயின் மீது ஒரு கெட்டி துணி விரித்து பச்சைக் காய்கறிகளைப் பாதுகாத்தால் சீக்கிரம் அழுகிப் போகாமல் இருக்கும்.
Explore