கோடைகாலத்தில் பச்சை திராட்சையின் பல்வேறு பயன்கள்..!

கோடையில் பச்சை திராட்சை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கோடையில் பச்சை திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னவென்று தெரிந்து கொள்வோம்.
பச்சை திராட்சையில் அதிக நீர்ச்சத்து உள்ளது. இது உடலை நீரிழப்பிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. கோடையில் அதிகமாக வியர்ப்பது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும்.
பச்சை திராட்சையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன.
பச்சை திராட்சையில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பச்சை திராட்சையில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
பச்சை திராட்சையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை இளமையாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கின்றன. இது சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
பச்சை திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இவை உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.