கிறிஸ்துமஸ்க்கு உறவினர்களுக்கு கேக் கொடுக்கணுமா? வீட்டிலேயே பனானா கேக் செய்வது எப்படி?

கிறிஸ்துமஸ்க்கு உறவினர்களுக்கு கேக் கொடுக்கணுமா? வீட்டிலேயே பனானா கேக் செய்வது எப்படி?

Published on
தேவையான பொருட்கள் : மைதா மாவு, சர்க்கரை, கோகோ பவுடர், எண்ணெய், பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா, பழுத்த வாழைப்பழம், பால், சாக்லேட், தேவைக்கேற்ப வினிகர் ஆகியவை.
முதலில் வாழைப்பழத் துண்டுகள், சர்க்கரை மற்றும் எண்ணெய் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்கவும்.
பின்னர் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர் இவை நான்கையும் ஒன்றாகக் கலந்து சலித்து எடுக்கவும்.
பின்பு அதை வாழைப்பழ கலவையில் கொட்டிக் கிளறவும். அதில் கொஞ்சம் கொஞ்சமாக பால் ஊற்றி பசை போல, சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனுடன் வினிகர் மற்றும் சாக்லேட் துண்டுகளைச் சேர்த்து கலக்கவும்.
அடுத்ததாக ஒரு பாத்திரத்தின் உட்பகுதி முழுவதும் எண்ணெய் தடவி இந்தக் கலவையை அதில் ஊற்றவும்.
அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து, அதில் சிறிது தண்ணீரை ஊற்றி குக்கிங் ஸ்டாண்டு பொருத்தவும்.
பின்பு தண்ணீர் சூடானதும் கேக் கலவை இருக்கும் பாத்திரத்தை அதன் மேல் வைத்து, காற்று புகாதவாறு மூடி, மிதமான தீயில் வைக்கவும்.
30 நிமிடங்கள் வரை வேக வைத்து பின்பு ஆற வைக்கவும். இப்பொழுது சுவையான சாக்லேட் பனானா கேக் தயார்!

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com