எப்சம் உப்பை நீரில் கரைக்கும்போது இதிலிருக்கும் சல்பேட், மெக்னீசியம் போன்றவை வெளிப்படும். இந்த தாதுக்கள் பல்வேறு உடல் அமைப்புகளின் செயல்பாட்டிற்கு அவசியமானவை.
வலி நிவாரணம்: உடலில் போதிய அளவு மெக்னீசியம் இல்லாதவர்கள் தசைப்பிடிப்பு, உடல் வலி மற்றும் அழற்சி போன்ற பிரச்சினைகளை சந்திக்கக்கூடும்.
எப்சம் உப்பில் இருக்கும் மெக்னீசியம் உடலில் நோய் பாதிப்பின் தன்மையை குறைத்து, தசைப்பிடிப்பு மற்றும் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
மன அழுத்தம் : உடலில் மெக்னீசியம் போதுமான அளவு இல்லாவிட்டால், மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும்.
எப்சம் உப்பில் மெக்னீசியம் நிறைந்துள்ளதால், அது உடலில் உள்ள கார்டிசோலின் அளவைக் குறைத்து, மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
மலச்சிக்கல் : குடல் இயக்கத்தின் செயல்பாடு குறைந்து மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படுவது மலச்சிக்கல் எனப்படும்.
எப்சம் உப்பு குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவும். மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் அளிக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவும்.
சரும ஆரோக்கியம் : முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பொலிவின்மை உள்பட அனைத்துவிதமான சரும பிரச்சினைகளையும் போக்கும் தன்மை எப்சம் உப்புக்கு உண்டு.
தூக்கம் : உடலில் போதிய அளவு மெக்னீசியம் இல்லாமல் இருந்தாலோ அல்லது குறைந்த அளவில் இருந்தாலோ அது தூக்கத்தை பாதிக்கும்.
மெக்னீசியம் நிறைந்த எப்சம் உப்பை பயன்படுத்துவது உடலில் மெலடோனின் அளவை அதிகரிக்க செய்யும். தூக்கத்தைத் தூண்டும் ஹார்மோன் தரத்தை மேம்படுத்தவும் உதவும்.