காது வலிக்கான காரணங்கள் என்னென்ன?
காது வலிக்கு மிகவும் பொதுவான காரணம் காதில் ஏற்படும் தொற்று ஆகும். இது யூஸ்டாசியன் குழாயில் திரவம் குவிவதால் இந்த தொற்று ஏற்படுகிறது.
இது நடுத்தர காதை இணைக்கிறது. யூஸ்டாசியன் குழாய் நீண்ட காலத்திற்கு அடைக்கப்பட்டால், திரவம் குவிந்து, காது தொற்றுக்கு வழிவகுக்கும். இதனால் காது வலி ஏற்படுகிறது.

காது வலிக்கான காரணங்கள் : சைனஸ் தொற்று காரணமாக காது வலி ஏற்படலாம்.

தொண்டை தொற்று காரணமாக காதில் வலி ஏற்படக்கூடும்.

காதில் நீர் தேங்குவதால் ஏற்படும் தொற்று, காது வலியை உண்டாக்கும்.

காதில் தேங்கும் அழுக்குகள் மெழுகு கட்டிபோல் உருவாகி, காது வலிக்கு வழிவகுக்கும்.

தாடையில் வலி ஏற்படுவதன் மூலம் காது வலி உண்டாகலாம்.

விமானத்தின் போது உயர மாற்றங்கள் காரணமாக காது வலி ஏற்படும். இது சிறிது நேரத்திற்குள் தானாகவே சரியாகிவிடும்.