நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் என்ன?

metaAI
கர்ப்பகாலத்தின் ஹார்மோன்கள், இன்சுலின் செயல்பாட்டை எதிர்த்து, ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்வதை, கர்ப்பகால நீரிழிவு நோய் என்று அழைக்கிறார்கள்.
metaAI
இது பொதுவாக கர்ப்பத்தின் 24வது முதல் 28வது வாரங்களுக்கு இடையில் ஏற்படுகிறது. நீரிழிவு நோய் உள்ள கர்ப்பிணி பெண்கள் இவற்றை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
metaAI
கார்போஹைட்ரேட் மிக அதிகமாக உள்ள உணவுகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட உணவுகளை தவிர்த்து, கோதுமை, திணை, சோளம் போன்ற தானிய வகைகளை உட்கொள்ள வேண்டும்.
metaAI
நன்கு வேக வைத்த பருப்பு வகைகளை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
metaAI
பால், மீன், முட்டையின் வெள்ளை, போன்ற புரதங்கள் மற்றும் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ்(சர்க்கரை உயன்நல் குறியீடு) குறைவாக உள்ள கொய்யா, மாதுளம், சாத்துக்குடி, ஆரஞ்சு, அத்திப்பழம் போன்ற பழங்களை சாப்பிடலாம்.
metaAI
நிறைவுற்ற கொழுப்பு அதிகமாக இருக்கும் சிகப்பு இறைச்சி வகைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாட்டிலில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
metaAI
தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்து உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
metaAI
ரத்த சர்க்கரை மற்றும் ரத்தக்கொதிப்பை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும்.
metaAI
Explore