மழைக்காலம்..வெந்நீரில் குளித்தால் என்ன நடக்கும்?

மழைக்காலம்..வெந்நீரில் குளித்தால் என்ன நடக்கும்?

Published on
மழைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சி நிலைக்கு மாறிவிடும். அந்த குளிர்ந்த நீரில் குளியல் போடுவதற்கு பலரும் விரும்புவார்கள்.
ஆனால் குளிர்ந்த நீரை விட இதமான சூட்டுடன் கூடிய வெந்நீரில் குளியல் போடுவதுதான் மழைக்காலத்திற்கு சிறந்தது என்று ஒரு சிலர் கருதுவார்கள்.
வெந்நீர் குளியல்: தண்ணீரை சூடுபடுத்தி மேற்கொள்ளும் இந்த குளியல் மூலம் வெளிப்படும் வெப்பம் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.
வெந்நீர் குளியல் தசை வலி, மூட்டு வலியை குறைக்க உதவும்.
வெதுவெதுப்பான நீர் சருமத்தில் இருக்கும் துளைகளை திறக்க வழிவகை செய்யும். அதில் படிந்திருக்கும் அழுக்கு, எண்ணெய் தன்மை மற்றும் நச்சுக்களை நீக்குவதை எளிதாக்கும்.
தூங்க செல்வதற்கு முன்பு சுடுநீரில் குளிப்பது உடல் வெப்பநிலையை அதிகரிக்க செய்யும். பின்னர் உடல் குளிர்ச்சி நிலைக்கு மாற்றமடையும்போது தூக்கத்தை வரவழைக்கும். நன்றாக தூங்குவதற்கு வழிவகை செய்யும்.
வெந்நீர் குளியல் மன அமைதியை ஊக்குவிப்பதோடு, மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
வெந்நீர் குளியல் நன்மைகளை அளிக்கிறது என்றாலும், அதிக நேரம் அல்லது அதிக சூடான நீரில் குளிப்பது சிலருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com