என்னது மற்ற கிழங்குகளைவிட கருணைக்கிழங்கு ஆரோக்கியத்திற்கு சிறந்ததா?

கருணைக்கிழங்கு சுவையிலும் மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்கக்கூடியது. சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு ஆகியவையும் கருணைக்கிழங்கு வகையைச் சேர்ந்தவைதான். ஆனால் கருணைக்கிழங்குகளிலேயே அதிக நன்மைகள் நிறைந்துள்ளன.
கருணைக்கிழங்கிலுள்ள நார்ச்சத்து, வாய்வு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும்.
கருணைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து நிறைவாகக் காணப்படுவதால் இதயநோய்கள் நெருங்காது.
கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு வலுசேர்க்கும்; குடலில் கிருமி சேராமல் தடுக்கக்கூடும்.
இந்த கிழங்கு ரத்தநாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதுடன், ரத்தம் உறைதலைத் துரிதப்படுத்துவதிலும் முக்கியப் பங்குவகிக்கிறது.
பெண்களுக்கு ஹார்மோன் சமச்சீரின்மை ஏற்படாமல் தடுக்கும். முக்கியமாக, 40 வயதுக்கு மேல் மெனோபாஸ் ஏற்படும்போது உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவை அதிகரிக்கும்.
மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து கருணைக்கிழங்கு சாப்பிட்டுவர நிவாரணம் கிடைக்கும்.
உடல் எடை அதிகரித்து மூட்டுவலி, முடக்குவாதம் உள்ளிட்ட கோளாறுகளால் அவதிப்படுவோர் கருணைக்கிழங்கை தினசரி சாப்பிட வேண்டியது அவசியம்.
Explore