உலக சுற்றுலா தினம்: கண்டிப்பாக பார்க்க வேண்டிய நாடுகள்!

Photo: wikipedia
துபாய்: குடும்பத்தினர் அனைவருக்கும் விருப்பமான முறையில், அனைத்து வயதினரும் விரும்பும் வகையிலும் அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்டதாகவும் கண்களையும், மனதையும் வசீகரிக்கும் வகையில் துபாய் பெருநகரில் ஏராளமான கேளிக்கை அம்சங்கள் கொட்டிக் கிடக்கின்றன.
Photo: wikipedia
இத்தாலி: இங்கு சென்றால் ரோமின் பழமையான வரலாற்றை தெரிந்துகொள்ளலாம். வெனிஸ் கால்வாய் மற்றும் அமல்பி கடற்கரை உங்களின் கண்களுக்கு விருந்தளிக்கும்.
Photo: wikipedia
பிரான்ஸ்: பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் கோபுரம் உலகின் பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இங்குள்ள ஒவ்வொரு தெருக்களும் கலை, காதல் மற்றும் கலாச்சாரம் கலந்த அனுபவத்தை அளிக்கின்றது.
Photo: wikipedia
அமெரிக்கா: நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, வாஷிங்டன் டி.சி., போன்ற நகரங்கள் உலகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. இங்கு ஒருமுறை பயணித்தால், பல மாதங்கள் அல்ல, பல ஆண்டுகளாக நினைவில் நிலைத்திருக்கும்!
Photo: wikipedia
இலங்கை: மலை உச்சியில் அமைந்த தேயிலை தோட்டங்கள், பழமை வாய்ந்த கோவில்கள் என, இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளன.
Photo: wikipedia
மாலத்தீவுகள்: அழகழகான கடற்கரைகள், நெஞ்சம் அள்ளும் இயற்கை காட்சிகள் என சுற்றுலாப் பயணிகளை கவரும் பல விஷயங்கள் மாலத்தீவில் உள்ளன. பரபரப்பான வாழ்க்கை சூழலுக்கு இடையே நொந்துபோன மனங்களை புத்துணர்ச்சியூட்ட மாலத்தீவு சிறந்த தேர்வு.
Photo: wikipedia
கிரீன்லாந்து: உலகில் கிரீன்லாந்து போன்று மற்றொரு இடமில்லை. மலைக்க வைக்கும் மலையேற்றம், திமிங்கலங்கள், பாரம்பரியமான நாய்களின் பனிச்சறுக்கு விளையாட்டு ஆகியவற்றை ரசிப்பதற்காக கிரீன்லாந்து நிச்சயம் செல்ல வேண்டும்.
Photo: wikipedia
Explore