பனி காலத்தில் சிறுநீரை அடக்கவே கூடாது... ஏன்?

பனி காலத்தில் சிறுநீரை அடக்கவே கூடாது... ஏன்?

Published on
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான உணர்வு பனிக்காலத்தில் அதிகமாக இருக்கும். இரவிலும் பகலிலும் மற்ற காலங்களை விட அதிகமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு பனி காலத்தில் உண்டாகும்.
மற்ற காலங்களை ஒப்பிடும்போது பனி சமயங்களில் நாம் மிகக் குறைந்த அளவு தண்ணீர் குடிப்போம். ஆனால் அடிக்கடி சிறுநீர் கழிப்போம். எத்தனை முறை தான் சிறுநீர் கழிப்பது என்று நினைத்து அடக்கி வைத்துக் கொள்வோம்.
பனி காலத்தில் நம்முடைய உடலில் டையூரிசிஸ் என்னும் ஒரு செயல் தூண்டப்படும். அது தான் நம்மை அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டுகிறது.
பனி காலத்தில் மிகக் குறைவாக வெப்பநிலை, ரத்த நாளங்களை சுருங்கச் செய்கிறது. உடல் உறுப்புகளில் அதிக ரத்த ஓட்டத்தை எடுத்து வருகிறது. அதோடு மன அழுத்தத்தையும் அதிகரிக்கச் செய்கிறது.
இந்த ரத்த ஓட்டம் சிறுநீரகங்கள் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளுக்கும் செல்கிறது. இந்த செயல்முறை வாசோகன்ஸ்டிரிக்ஷன் என்னும் ரத்த நாளச் சுருக்கம் என்று அழைக்கப்படுகிறது.
சிறுநீர் கழிக்காமல் சேமிக்கப்படும் முழு சிறுநீர்ப்பை என்பது உங்கள் உடல் வெப்பத்தை இழக்கும் மற்றொரு வழியாகும். உடனடியாக சிறுநீர் கழிப்பது உங்கள் உடல் வெப்பத்தை பாதுகாக்க உதவுகிறது.
நரம்புகள் அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும். உடல் அதிக அழுத்தத்தில் இருக்கும்போதும் இதே உணர்வு உண்டாகும்.
சிறுநீர் கழிப்பதை அடக்குவது உடலின் வெப்பநிலையில் சமநிலையின்மையை உண்டாக்குவதோடு, சிறுநீரகச் செயலிழப்பையும் ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com