திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று சனிக்கிழமையையொட்டி பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
Published on

திருநள்ளாறு

சனிக்கிழமையையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

சனீஸ்வரர் கோவில்

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனி பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

பக்தர்கள் குவிந்தனர்

இந்தநிலையில் இன்று சனிக்கிழமை என்பதால் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

அதிகாலை முதலே வந்த பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் எள் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் வருகையையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நகர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com