

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, முகமூடி, பிசாசு ஆகிய படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்து, பிசாசு-2 படத்தை டைரக்டு செய்கிறார். பிசாசு படம் வெற்றிகரமாக ஓடி தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் ஆகிய மூன்று தரப்பினருக்கும் லாபகரமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து பிசாசு-2 படம் உருவாகிறது.
இதில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். அவருடன் பூர்ணா, காயத்ரி ரெட்டி ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இது, குலைநடுங்க வைக்கும் பேய் படம் என்பதால் லண்டனை சேர்ந்த ஒளிப்பதிவாளர் சிவா சாந்தகுமார் வரவழைக்கப்பட்டு இருக்கிறார். கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். டி.முருகானந்தம் தயாரிக்கிறார்.
படத்துக்காக திண்டுக்கல்லில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டு இருக்கிறது. அதில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. ஒரேகட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.