பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

திருக்கனூர் அருகே செல்போன் பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.
பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
Published on

திருக்கனூர்

திருக்கனூர் அருகே உள்ள வம்புபட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). கூலித்தொழிலாளி. அவரது மனைவி நதியா (33). இவர்களது மகள் தேவஸ்ரீ (16). இவர் கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர் அடிக்கடி செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த தேவஸ்ரீ வீட்டின் படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com