லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி

புதுவை கதிர்காமத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.
லாரி சக்கரத்தில் சிக்கி பிளஸ்-2 மாணவர் பலி
Published on

புதுச்சேரி

புதுவை முத்திரையர்பாளையம் பஜனை மடம் தெருவை சேர்ந்தவர் பாவாடைகுமார். அவரது மகன் சுரேந்தர் (வயது17). இவர் மூலக்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் நேற்று நள்ளிரவு தனது தாயாரின் ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார்.

கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரி அருகே வந்தபோது சுரேந்தர் ஓட்டிச்சென்ற ஸ்கூட்டர் முன்னே சென்ற மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் கீழே விழுந்த சுரேந்தர் அந்த வழியாக வந்த லாரியின் சக்கரத்தில் சிக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுரேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து புதுச்சேரி வடக்குப்பகுதி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com