போலீஸ்காரர் மகனை அடித்து கொன்ற 4 பேர் கைது

வாகன நிறுத்தும் தகராறில் போலீஸ்காரர் மகனை அடித்து கொன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீஸ்காரர் மகனை அடித்து கொன்ற 4 பேர் கைது
Published on

புனே, 

புனேயை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் 32 வயது மகன் கடந்த 26-ந் தேதி அம்பேகாவ் பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்றிருந்தார். அங்கு வாகன நிறுத்தம் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி இருந்த போது மற்றொரு கார் அங்கு வந்து அவரது வாகனம் மீது இடித்ததாக தெரிகிறது. இதனால் வாலிபர் காரில் இருந்த 4 பேரிடம் தட்டி கேட்டார். இது தொடர்பாக அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் அவரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியானார். இதனால் அவர்கள் வலிபரின் உடலை மறைவிடத்தில் போட்டு விட்டு தப்பி சென்றனர். மறுநாள் அங்கு கிடந்த உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் வாலிபரை தாக்கி கொன்ற 4 பேரின் அடையாளம் தெரியவந்தது. நேற்று முன்தினம் போலீஸ்காரரின் மகனை அடித்து கொன்ற 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com