போலீஸ் நேர்மையாக விசாரிக்க வேண்டும் - விமல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு

தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது நடிகர் விமல் வழக்கு தொடர்ந்திருந்தார். நடிகர் விமல் கொடுத்த வழக்கை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
போலீஸ் நேர்மையாக விசாரிக்க வேண்டும் - விமல் வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

நடிகர் விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் சினிமா தயாரிப்பாளர்கள் சிங்காரவேலன், தினேஷ், கோபி ஆகியோர் மீது விருகம்பாக்கம் போலீசார் மோசடி வழக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கோபி தொடர்ந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் கோகுலகிருஷ்ணன், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று வாதிட்டார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.வெங்கடேஷ், மனுதாரருக்கு எதிரான புகாரில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில், "விமல் கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை போலீசார் நேர்மையாக விசாரிக்க வேண்டும். குற்றச்சாட்டு முகாந்திரம் இருந்தால், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம், இல்லை என்றால் வழக்கை முடித்து வைத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது" என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com