

புதுச்சேரி
புதுச்சேரியில் இருசக்கர வாகனங்கள் திருட்டு, குற்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு திவ்யா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் போலீசார் கோட்டக்குப்பம் சாலையில் நள்ளிரவில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற இருசக்கர வாகனங்கள், கார்களை நிறுத்தி வாகனங்களுக்கு உரிய ஆவணங்களை உள்ளதா? என சரி பார்த்தனர். உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர்.