போதைப்பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் போலீசார் செயல்பட வேண்டும் - புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி

காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
போதைப்பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் போலீசார் செயல்பட வேண்டும் - புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காவல்துறையில் அரசியல் தலையீடு இல்லை என்றும், திறமை இருந்தால் படித்த இளைஞர்களுக்கு அரசுப்பணி கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மேலும் போதைப்பழக்கத்தில் இருந்து மாணவர்களை மீட்கும் வகையில் போலீசார் செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். காவலர்களுக்கென சர்வதேச தரத்தில் நீச்சல் குளம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும், காவல்துறையை நவீனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்-மந்திரி ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com