புனேயில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

புனேயில் போக்குவரத்து போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புனேயில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

புனே, 

புனேயில் போக்குவரத்து போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போக்குவரத்து போலீஸ்காரர்

புனே லோகாவ் கேரே காலனி பகுதியை சேர்ந்தவர் வைபவ் ஷிண்டே (வயது29). போக்குவரத்து போலீஸ்காரரான இவர், தனது மனைவி காஞ்சனுடன் வசித்து வந்தார். மேலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு தயாராகி வந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை தனது வீட்டின் மொட்டை மாடியில் இருந்த மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த கடிதம் ஒன்றையும் கைப்பற்றினர்.

கடைசி விருப்பம்

அந்த கடிதத்தில், "என்னை மன்னித்து கொள்ளவும், எனது கடைசி விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் எனது மனைவியை எனது சகோதரர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என தெரிவித்து இருந்தார். இவர் கடந்த 2 மாதத்திற்கு முன்பு மூலநோய் பாதிப்பு ஏற்பட்டு அதற்கான அறுவை சிகிச்சை செய்திருந்தார். இருப்பினும் அவரது தற்கொலைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com