பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் சேஷ வாகனத்தில் ஊர்வலம்

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை சந்திப்பு பெருவிழா நடைபெற உள்ளது.
பொன்னேரி கரி கிருஷ்ண பெருமாள் சேஷ வாகனத்தில் ஊர்வலம்
Published on

பொன்னேரி அடுத்த திருவாயர்பாடியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கரிகிருஷ்ண பெருமாள் திருக்கோவில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு வழிபாடுகள் வாகன சேவைகள் நடைபெறுகின்றன.

விழாவின் 4-வது நாளான இன்று சேஷ வாகனத்தில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை சந்திப்பு பெருவிழாவும், 19-ம் தேதி தேர் திருவிழாவும் நடைபெறுகின்றன.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com