தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்
Published on

சிவகங்கை,

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தினவிழாவில் தமிழகத்தின் சார்பில் அனுப்பப்பட்ட சிவகங்கை ராணி வேலுநாச்சியார் உள்ளிட்டவர்களை கொண்ட அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்காததை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் முருகானந்தம் தலைமையில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் சிவகங்கையில் உள்ள ராணி வேலுநாச்சியார் சிலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன் றனர். தொடர்ந்து சிவகங்கை நகர் போலீசார் தற்போது கொரோனா நோய் பரவல் தொற்று காரணமாக உண்ணா விரதம் இருக்க அனுமதி கிடையாது என்று கூறி அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com