கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கை வாலிபருக்கு சரமாரி அடி, உதை

சாந்தாகுருசில் கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கையில் ஈடுபட்ட வாலிபரை மாணவர்கள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கல்லூரி மாணவி முன் ஆபாச செய்கை வாலிபருக்கு சரமாரி அடி, உதை
Published on

மும்பை,

மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி சம்பவத்தன்று இரவு அங்குள்ள பூங்காவுக்கு சென்றிருந்தார். அங்கு தனது தோழிக்காக காத்துக்கொண்டு இருந்தார். அப்போது மாணவியின் அருகில் இருந்த வாலிபர் ஒருவர் மாணவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தார்.

இதனால் தர்மசங்கடமான நிலையை உணர்ந்த மாணவி அங்கிருந்து சென்று வேறொரு இடத்தில் அமர்ந்தார். அங்கும் வந்த அந்த வாலிபர் மாணவியின் முன்னால் ஆபாச செய்கையில் ஈடுபட்டார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது நண்பர்கள் சிலருக்கு போன் செய்து தகவலை கூறினார். அங்கு வந்த மாணவியின் நண்பர்கள் அந்த வாலிபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் அந்த வாலிபரை வகோலா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவரது பெயர் வாகித் அலி (வயது29) என்பது தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com