வைரலாகும் பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்

பிக்பாஸ் பிரபலம் கவின் நடிக்கும் வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
வைரலாகும் பிக்பாஸ் கவின் வெப் தொடரின் போஸ்டர்
Published on

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமான கவின், தற்போது சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடித்து வெளியான லிஃப்ட் திரைப்படம் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் இதுதவிர நெல்சன் இயக்கும் டாக்டர் மற்றும் பீஸ்ட் ஆகிய படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

இதனிடையில் நடிகர் கவின் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். ஆகாஷ் வாணி என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்தொடரை அறிமுக இயக்குனர் ஈநாக் அபில் இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிவர். இந்த வெப்தொடரில் கவினுக்கு ஜோடியாக பிகில் பட பிரபலம் ரெபா மோனிகா ஜான் நடிக்கிறார்.

மேலும் சரத் ரவி, தீபக் பரமேஷ், வின்சா, அபிதா வெங்கட், மேகி ஆகியோர் இந்த வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சுவாரசியமாக உருவான இந்த வெப் தொடரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் அவருடைய ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com