புரட்டாசி பௌர்ணமி... தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமி

மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் “கோவிந்தா.. கோவிந்தா” என முழக்கமிட்டபடி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
புரட்டாசி பௌர்ணமி... தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்த மலையப்ப சுவாமி
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று இரவு தங்கக் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அவ்வகையில், புரட்டாசி மாத பௌர்ணமியையொட்டி நேற்று இரவு கருட சேவை நடந்தது. உற்சவர் மலையப்ப சுவாமி சர்வ அலங்காரத்தில் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என முழக்கமிட்டபடி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர். கருட வாகன சேவை நிகழ்வில் திருமலையின் இரு பீடாதிபதிகள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com