இன்று மின்சாரம் நிறுத்தம்

இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
இன்று மின்சாரம் நிறுத்தம்
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் ஒரு சில பகுதிகளில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி காரணமாக இன்று(செவ்வாய்க்கிழமை) மற்றும் 20-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பத்தூர் நகர் பகுதியில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் செவ்வாய்க்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் அஞ்சல்வீதி, அகில்மனைத் தெரு, சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, தேரோடும் வீதி, தென்மாபட்டு, பெரியார் நகர், காந்தி வீதி, கறிக்கடைசந்து ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com