அரசனூர், மதகுபட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்

அரசனூர், மதகுபட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது
அரசனூர், மதகுபட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம்
Published on

சிவகங்கை,

மதகுபட்டி துணை மின் நிலையத்தில் வருகிற 12-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மதகுபட்டி ஐ.டி.ஐ., அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மாச்சி பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கள்ள ராதினி பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணி பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம் பட்டி, காளையார் மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மா காலனி, நாலுகோட்டை, கணேசபுரம் அரளிக்கோட்டை, ஜமீன்தார் பட்டி, ஆவத்தாரன்பட்டி, ஏரியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார். மேலும் அரசனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் 12-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அரசனூர், திருமாஞ்சோலை, இலுப்பக்குடி, ஏனாதி, படமாத்தூர், பச்சேரி, வேம்பத்தூர், களத்தூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மானாமதுரை மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com