சேந்தமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்

சேந்தமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
சேந்தமங்கலம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
Published on

நாமக்கல்:

சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணுர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி, சாலப்பாளையம் மற்றும் சிவியாம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் எருமப்பட்டி துணை மின்நிலையத்தில் வருகிற 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டாஞ்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, பொன்னேரி, நா.புதுக்கோட்டை, கோணங்கிப்பட்டி, காவக்காரப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com